இளம்பெண் தற்கொலை
சங்கரன்கோவில் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில், மே:
சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி பாண்டிச்செல்வி (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பாண்டிச்செல்வியின் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தனக்கு நேரில் அழைக்கவில்லை என்று கூறி வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் ஆளில்லாத நேரத்தில் பாண்டிச்செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் பாண்டிச்செல்வியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story