கொரோனா மையத்திலிருந்து தப்பி சென்ற கைதியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு


கொரோனா மையத்திலிருந்து தப்பி சென்ற கைதியை பிடிக்க  3 தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 24 May 2021 4:08 AM IST (Updated: 24 May 2021 4:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா மையத்திலிருந்து தப்பி சென்ற கைதியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சேலம்:
கொரோனா மையத்திலிருந்து தப்பி சென்ற கைதியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கொலை வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள எலத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 43). கடந்த 2004-ம் ஆண்டு கோவில் காவலாளி ஒருவர் கொலை வழக்கில் வெங்கடேசனை ஊத்தங்கரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜாமீனில் வெளியில் வந்த அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. அதன் பேரில் போலீசார் அவரை 2019-ம் ஆண்டு மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணியனூர் சட்டக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் போலீசார் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென்று தப்பி ஓடி விட்டார். இதைத்தொடர்ந்து தப்பியோடிய கைதி வெங்கடேசை பல்வேறு இடங்களில் போலீசார் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
தலைமறைவான கைதியை பிடிக்க 3 தனிப்படைகளை போலீசார் அமைத்தும், கைதி தப்பியோடிய சம்பவத்தையொட்டி சிறை வார்டன்கள் 3 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்தும் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story