தளி அருகே பயங்கரம்: வாலிபர் சுட்டுக்கொலை


தளி அருகே பயங்கரம்: வாலிபர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 24 May 2021 4:50 AM IST (Updated: 24 May 2021 4:51 AM IST)
t-max-icont-min-icon

தளி அருகே வாலிபர் ஒருவர் நேற்று இரவு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி:
தளி அருகே வாலிபர் ஒருவர் நேற்று இரவு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் சுட்டுக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள பெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 28). இவர் நேற்று இரவு 11.30 மணியளவில் அவரது வீட்டில் இருந்தார்.
அப்போது காரில் ஒரு மர்ம கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் லோகேசின் வீட்டு கதவை தட்டினார். உடனே லோகேஷ் கதவை திறந்து வெளியே வந்து யார் தட்டினார்கள் என்று பார்த்தார்.
அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக வாலிபர் லோகேசை நோக்கி சுட்டனர். இதில் லோகேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
போலீசார் விசாரணை
இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். லோகேசை கொலை செய்தவர்கள் ஓசூரை சேர்ந்த பிரபல ரவுடி தலைமையிலான கும்பல் என்று கூறப்படுகிறது.
பண விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story