கம்பத்தில், முழு ஊரடங்கையொட்டி 29 வாகனங்களில் நடமாடும் உழவர் சந்தை
கம்பத்தில், முழு ஊரடங்கையொட்டி 29 வாகனங்களில் நடமாடும் உழவர் சந்தை தொடங்கப்பட்டுள்ளது.
கம்பம்:
தமிழகத்தில் நேற்று முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் கம்பம் உழவர்சந்தை மூலம், பொதுமக்களுக்கு 29 வாகனங்களில் நடமாடும் உழவர் சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு உழவர்சந்தை நிர்வாக அலுவலர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி, உழவர்சந்தை உதவி அலுவலர்கள் மணிமாறன், மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனிமாவட்ட மனிதஉரிமை மற்றும் சமூகநீதி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெபராஜ் காய்கறி வாகன விற்பனையை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து உழவர்சந்தை நிர்வாக அலுவலர் கூறுகையில், ஊரடங்கில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வராமல் இருக்க தமிழக அரசு உத்தரவின்படி நடமாடும் உழவர்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யப்படும். கம்பம் நகரில் 29 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் உள்ள காய்கறிகளுக்கு உழவர்சந்தையில் நிர்ணயம் செய்த விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. விலைப்பட்டியலை விட அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story