கோவில்பட்டியில் 40 வாகனங்களில் காய்கறி விற்பனை


கோவில்பட்டியில் 40 வாகனங்களில் காய்கறி விற்பனை
x
தினத்தந்தி 24 May 2021 6:03 PM IST (Updated: 24 May 2021 6:03 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் 40 வாகனங்களில் காய்கறி விற்பனை நடந்து வருகிறது

கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரசபை சார்பில் நேற்று முதல் 36 வார்டுகளில் 40 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறி விற்பனை செய்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பது அவசியம்.
காய்கறிக்கான விலைப்பட்டியல் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் அரசின் தோட்டக்கலை மற்றும் விவசாய துறை சார்பில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் தான் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
காய்கறி விற்பனையை நகராட்சபை ஆணையாளர் ராஜாராம் தலைமையில், சுகாதார அதிகாரி இளங்கோ மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன் கண்காணித்து வருகின்றனர்.

Next Story