போலீஸ் காவலில் விசாரணை கைதி சாவு இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணி இடைநீக்கம்
கோண்டியாவில் போலீஸ் காவலில் இருந்த விசாரணை கைதி பலியான சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
கோண்டியா,
கோண்டியா மாவட்டம் கும்பார்தோலி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சம்பவத்தன்று ரைசமா பகுதியில் உள்ள பள்ளியில் தனது கூட்டாளிகளுடன் புகுந்து அங்கிருந்த பொருட்களை திருடி சென்றார். இது பற்றிய புகாரின்பேரின் ஆம்காவ் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமார் மற்றும் கூட்டாளிகள் 3 பேர், சிறுவன் என 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கோர்ட்டு அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.
இதன்படி சிறுவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மற்ற 4 பேரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ராஜ்குமாருக்கு உடல் நலம் ேமாசமடைந்தது. இதனால் போலீசார் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் ராஜ்குமார் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் ஆம்காவ் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் போலீசார் தாக்கிய சம்பவத்தில் தான் அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டினர். இது பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்சாரே அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் சவான், உதவி போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் மகாவீர் ஜாதவ், போலீஸ் டிரைவர் கீம்ராஜ், போலீஸ்காரர் அருண் என 4 போலீசார் அதிடியாக பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்சாரே உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story