40 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் ஐ.என்.எஸ். திரிகந்த் கப்பல் மும்பை வந்தடைந்தது
40 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் ஐ.என்.எஸ். திரிகந்த் கப்பல் மும்பை வந்தடைந்தது.
மும்பை,
கொரோனா 2-வது அலை காரணமாக நாட்டில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு நாடுகளுக்கு ஆக்சிஜன், மருந்து பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றன. குறிப்பாக கடற்படை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் அதிகளவில் கொண்டு வரப்படுகிறது.
இதில் கத்தார் நாட்டில் இருந்து 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். திரிகந்த் மும்பை வந்து உள்ளது.
இது குறித்து கடற்படை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘கொரோனா நிவாரணப்பணிகள் சமுத்திர சேது - 2 திட்டத்தின் கீழ், கத்தாரில் இருந்து ஐ.என்.எஸ். திரிகந்த் கப்பல் தலா 20 மெட்ரிக் டன் எடையுள்ள 2 மருத்துவ திரவ ஆக்சிஜனுடன் மும்பை வந்தடைந்து உள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரணப்பணிகளுக்காக தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர சமுத்திர சேது - 2 திட்டத்தில் ஐ.என்.எஸ். திரிகந்த் கப்பல் உள்பட 9 கப்பல்கள் ஈடுபட்டு உள்ளன.
Related Tags :
Next Story