சீர்காழி அருகே 105 லிட்டர் சாராயம் பறிமுதல் வியாபாரிக்கு போலீசார் வலைவீச்சு
105 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
சீர்காழி:-
சீர்காழி அருகே கோவில் பத்து கிராமம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது56). இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை தொடர்ந்து விற்பனை செய்து வந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு புகார் வந்தது. இதையடுத்து சீர்காழி மதுவிலக்கு போலீசார் நேற்று கோவில்பத்து கிராமத்தில் உள்ள ஆறுமுகத்தின் வீட்டுக்கு சென்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து ஆறுமுகம் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 105 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story