தென்னை மரத்தை வேரோடு சாய்த்த காட்டுயானைகள்
கொடைக்கானல் அருகே தென்னை மரத்தை வேரோடு காட்டுயானைகள் சாய்த்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை, ஐந்துவீடு, பாரதி அண்ணாநகர், கோம்பை, புலியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகள் அதிகளவில் உள்ளன.
இவை அடிக்கடி கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு ஐந்துவீடு கிராம பகுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் புகுந்தது.
அங்கு தேசிங்கு ராஜா என்பவருடைய வீட்டின் அருகில் இருந்த தென்னை மரத்தை வேரோடு சாய்த்தது.
அந்த மரம் விழுந்து வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியும் சேதமானது.
அப்பகுதியில் இருந்தவர்கள் சத்தம் போட்டவுடன் யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் யானைகள் கிராமங்களுக்குள் நுழையாமல் தடுப்பதற்காக வனப்பகுதியின் அருகே அகழிகள் வெட்டப்பட்டு வருகிறது.
அந்த பணிகள் முடிவடைந்தவுடன் யானைகள் கிராம பகுதிகளுக்குள் வருவது தடுக்கப்படும் என்றனர்.
இதனிடையே கிராம பகுதிகளில் யானைகள் மற்றும் வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story