ஆட்டோவில் கிராமம் கிராமமாக சென்று முழு ஊரடங்கு குறித்து போலீசார் விழிப்புணர்வு
ஆட்டோவில் கிராமம் கிராமமாக சென்று முழு ஊரடங்கு குறித்து போலீசார் விழிப்புணர்வு
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் பகுதியில் தளர்வில்லா முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியதாலும், வாகனங்கள் ஓடாததாலும் பிரதான சாலைகள் வெறிச்சோடின. காலையில் இருந்தே போலீசாரும், வருவாய்த் துறையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வாகனங்களில் சென்றவர்களை தவிர வேறு யாரையும் காண முடியவில்லை.
மேலும் காலையில் சில திருமணங்கள் மணமக்கள் வீட்டிலேயே வைத்து எளிமையாக நடந்தது. ரிஷிவந்தியம், பகண்டை கூட்டுரோடு, திருப்பாலபந்தல் போலீசார் ஆட்டோவில் கிராமம் கிராமமாக சென்று ஒலிபெருக்கி மூலம் முழு ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதை காண முடிந்தது.
Related Tags :
Next Story