574 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழ வகைகள் விற்பனை


574 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழ வகைகள் விற்பனை
x
தினத்தந்தி 24 May 2021 10:41 PM IST (Updated: 24 May 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 574 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழ வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் நேற்று முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறி, பழக்கடை உள்ளிட்ட அனைத்து  கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இருப்பினும்  பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு காய்கறி, பழ வகைகளை வீடு தேடிச்சென்று தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை வாகனங்களில் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 574 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வாகனங்கள் மூலம் தினமும் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. 
இந்த பணிகளில் வேளாண் இணை இயக்குனர், தோட்டக்கலை துணை இயக்குனர், வேளாண் துணை இயக்குனர்கள், வேளாண் உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் வாகனங்கள் மூலம் 284 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகள் நடைபெறும். ஆகவே பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் அந்தந்த பகுதிக்கு வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் காய்கறிகள், பழ வகைகளை வாங்கி பயனடையலாம் என்று வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story