திருக்கோவிலூர் அருகே 2500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


திருக்கோவிலூர் அருகே 2500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 24 May 2021 10:42 PM IST (Updated: 24 May 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே 2500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட வசந்த கிருஷ்ணாபுரம் மற்றும் துறிஞ்சல் ஆற்றின் கரையோரம் சாராய ஊறல் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் குறிப்பிட்ட இடங்களுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கே மண்பானை, பாத்திரங்கள் மற்றும் பேரல்களில் 2,500 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ,1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
சாராயம் காய்ச்சுவதற்காக மர்மநபர்கள் அவற்றை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. பின்னர் சாராய ஊறலை தரையில் கொட்டி அழித்த போலீசார் அவற்றை பதுக்கி வைத்த மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story