கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 214 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 214 வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை கலெக்டர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி
காய்கறி, பழங்கள் விற்பனை
கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 412 ஊராட்களில் 148 வாகனங்கள், பேரூராட்சிகளில் 54 வாகனங்கள், நகராட்சியில் 12 வாகனங்கள் என மொத்தம் 214 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட 12 மினி லாரிகளை கலெக்டர் கிரண்குராலா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது நகராட்சி ஆணையர் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சங்கராபுரம்
அதேபோல் சங்கராபுரம் வட்டார தோட்டக்கலைத்துறை மூலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் 10 வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பழவகைகள் விற்பனையை தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன் தொடங்கி வைத்தார். இதில் தோட்டக்கலை அலுவலர் சக்திவேல், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வேலன், ராஜேஷ், சீனிவாசன், நித்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
சங்கராபுரம் பேரூராட்சி சார்பில் 8 வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனையை செயல் அலுவலர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார். அப்போது இளநிலை உதவியாளர்கள் வைத்திலிங்கம், சரவணன், வரி தண்டலர் புவனா, துப்புரவு மேற்பார்வையாளர் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
சின்னசேலம்
சின்னசேலம் வட்டார வேளாண்மை துறையின் மூலம் நைனார்பாளையம், உலகங்காத்தான், இந்திலி உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனையை வேளாண்மை உதவி இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) வசந்தா தொடங்கி வைத்தார். இதில் வேளாண் அலுவலர் அனுராதா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story