கொரோனாவுக்கு 4 பேர் சாவு


கொரோனாவுக்கு 4 பேர் சாவு
x
தினத்தந்தி 24 May 2021 11:06 PM IST (Updated: 24 May 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு 4 பேர் இறந்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 29,314 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 203 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 25,631 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 3,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் குப்புசாமி தெருவைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவரும், விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரம் வண்டிமேட்டை சேர்ந்த 76 வயதுடைய மூதாட்டியும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வதிஷ்டாபுரத்தை சேர்ந்த 79 வயதுடைய முதியவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 203-ல் இருந்து 206 ஆக உயர்ந்துள்ளது.

464 பேருக்கு தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 464 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,778 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 359 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25,990 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 3,582 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரத்து 255 பேரில், 14 ஆயிரத்து 987 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 122 பேர் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளனர். 
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த 50 வயது ஆண் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்தது. 
இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 1,200 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 338 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 255-ல் இருந்து 18 ஆயிரத்து 593-ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :
Next Story