பொள்ளாச்சி பகுதியில் 224 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி பகுதியில் 224 பேருக்கு பேருக்கு கொரோனா உறுதியானது. மூதாட்டி பலியானார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் 224 பேருக்கு பேருக்கு கொரோனா உறுதியானது. மூதாட்டி பலியானார்.
கொரோனா பரவல்
பொள்ளாச்சியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. நகரில் கே.ஆர்.ஜி.பி.நகர், அன்சாரி வீதி, ஜோதி நகர், கண்ணப்பன் நகர், டீச்சர்ஸ் காலனி, உள்பட பல்வேறு பகுதிகளில் 26 பேருக்கு கொரோனா உறுதியானது.
தெற்கு ஒன்றியத்தில் ஜமீன் கோட்டாம்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி, சீனிவாசபுரம், சூளேஸ்வரன் பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் 28 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் பூசாரிபட்டி, நெகமம், புளியம்பட்டி, ஆலாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
224 பேருக்கு பாதிப்பு
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 32 பேருக்கும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 48 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 60 பேருக்கும் சேர்த்து பொள்ளாச்சி பகுதியில் 224 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் பொள்ளாச்சி மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அவர்கள் வசித்து வரும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மூதாட்டி பலி
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட கணபதி வீதியில் 68 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவர் வசித்து வந்த வீடு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை தாலுகா பகுதிகளில் இது வரைக்கும் 6,178 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதில் 2,743 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தொற்று பாதித்த 1,122 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 170 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பி விட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story