ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் முழு ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடிய சாலைகள்
ராணிப்பேட்டை, அவக்கோணத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
ராணிப்பேட்டை
கடைகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தமிழ்நாட்டில் நேற்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையொட்டி நேற்று ராணிப்பேட்டையில் அத்தியாவசிய தேவையான மருந்து, பால் கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் மக்கள் நடமாட்டமின்றியும், வாகன போக்குவரத்து இன்றியும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலை (எம்.பி.டி ரோடு) நேற்று ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் சென்றதால் வாகன நெரிசலின்றியும், பரபரப்பின்றியும் வெறிச்சோடி காணப்பட்டது.
வாகன சோதனை
ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில், போலீசார் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிக்காக சென்றவவ்களை மட்டும் அனுமதித்தனர். மற்றவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை, சிப்காட் பகுதியில் அனுமதிக்கப்பட்ட சில தொழிற்சாலைகளை தவிர பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை. பெல் நிறுவனம் ஊரடங்கை முன்னிட்டு கடந்த 10-ந்் தேதி முதல் மூடப்பட்டது.
அரக்கோணம்
அரக்கோணம் நகரம் முழுவதும் போலீசார் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் மக்கள் வாகனங்களில் வெளியே வராதவகையில் தடுப்புகளை அமைத்துள்ளனர். டவுன் இன்ஸ்பெக்டர் முரளிதரன், அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் அந்தவழியாக கார், மோட்டார்சைக்கிளில் வந்தவர்களிடம் நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டை மற்றும் இ- பதிவு உள்ளவர்களை செல்ல அனுமதித்தார். நிறுவனங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களிடம் கம்பெனி பஸ்சில் மட்டுமே செல்ல வேண்டும், என்று கூறினர். முழு ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story