அரசு போக்குவரத்து கழகத்துக்கு 44 லட்சம் வருமானம்


அரசு போக்குவரத்து கழகத்துக்கு 44 லட்சம் வருமானம்
x
தினத்தந்தி 24 May 2021 11:33 PM IST (Updated: 24 May 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழகத்துக்கு 44 லட்சம் வருமானம்

கோவை

கோவையில் கடந்த 2 நாட்களில் பஸ்கள் இயக்கப்பட்டதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.44 லட்சம் வருமானம் கிடைத்து உள்ளது.

அரசு பஸ்கள் இயக்கம்

தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

அதற்கு முன்னதாக பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கடந்த 22 மற்றும் 23-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கோவையில் இருந்து திண்டுக்கல், தேனி, மதுரை, சேலம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த பஸ்களில் ஆயிரக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். 2 நாட்கள் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.44 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது.

இது குறித்து கோவை போக்குவரத்து கழக உதவி பொதுமேலாளர் செந்தில்குமார் கூறியதாவது

ரூ.44 லட்சம்

கோவை மாவட்டத்தில் 2 நாட்களில் வெளியூர்களுக்கு 410 பஸ்கள் இயக்கப்பட்டன. இது தவிர டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த 2 நாட்களில் மொத்தம் ரூ.44 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது.

கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் மூலம் 15 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர்.

 தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அரசு ஆஸ்பத்திரி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பணிக்கு வந்து செல்ல வசதியாக தனித்தனியாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் தூய்மை பணியாளர்களுக்காக கீரணத்தம், வெள்ளலூர், மலுமிச்சம்பட்டி, ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து 10 பஸ்கள் இயக்கப்படுகிறது. 

அரசு ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு துடியலூர், சரவணம்பட்டி, ஒண்டிப்புதூர், வடவள்ளி ஆகிய இடங்களில் இருந்து 4 பஸ்கள் இயக்கப்படுகிறது. கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்காக தனியாக பஸ்கள் இயக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story