நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 737 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 26,378 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 737 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 26,378 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 May 2021 11:41 PM IST (Updated: 24 May 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 737 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 26,378 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 641 ஆக அதிகரித்தது.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 737 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 378 ஆக அதிகரித்து உள்ளது.

4,303 பேருக்கு சிகிச்சை

இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 383 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 882 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 193 பேர் இறந்து விட்ட நிலையில், 4,303 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story