நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்


நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 May 2021 11:42 PM IST (Updated: 24 May 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

கடலூர், 

கொரோனா பரவலை தடுக்க தளர்வில்லா முழு ஊரடங்கு மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு நாட்களில் பொது மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும், 

பாதுகாப்பு நலன் கருதியும் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நடமாடும் வாகனங்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று விற்பனை செய்ய தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் வேளாண்மை விற்பனை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.


அமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்நிலையில் நேற்று கடலூர் நகராட்சியில் நடமாடும் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனையை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


ரூ.100 காய்கறி தொகுப்பை பொதுமக்களுக்கு நேரிலும் வழங்கினார். இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 7 நடமாடும் வாகனங்களும், தோட்டக்கலைத்துறை மூலம் 7 நடமாடும் வாகனங்களும், வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை மூலம் 5 நடமாடும் வாகனங்களும், நகராட்சி சார்பில் 4 நடமாடும் வாகனங்கள் என 23 நடமாடும் வாகனங்களை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து கூறியதாவது:-

உரிமம் ரத்து

 பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்து காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக விலைக்கு விற்றால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவரின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றார்.

தடுப்பூசி

அதைத் தொடர்ந்து கடலூர் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒயாசிஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, திட்ட இயக்குனர் மகேந்திரன், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விவசாயம் ஜெயக்குமார், நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ்ராஜன், இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம், துணை இயக்குனர் பிரேம் சாந்தி, உதவி இயக்குனர் பூவராகன், தாசில்தார் பலராமன், ஒயாசிஸ் எப்சிபா தவராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story