நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர்


நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர்
x
தினத்தந்தி 24 May 2021 11:45 PM IST (Updated: 24 May 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு முககவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நேற்று கரூர் நகராட்சி சார்பில் ெபாதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நகராட்சி ஆணையர் சுதா தொடங்கி வைத்தார். இதேபோல் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும், 700 நகராட்சி பணியாளர்கள் மூலம் நேரடியாக பொதுமக்கள் இருக்கும் இடத்திற்ேக சென்று கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இந்த பணி இன்றும், நாளையும் நடக்கிறது.

Next Story