இறைச்சி கடைகள் மூடல்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
இறைச்சி கடைகள் மூடப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலூா் முதுநகர்,
தமிழகத்தில் கடந்த ஏப்பரல் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கவில்லை.
மாறாக சிறிய ரக பைபர் படகில் சென்று மீன்பிடிக்கலாம் என்பதால், அந்த வகை படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். இதனால் துறைமுகத்தில் வழக்கத்தை விடவும், குறைந்த அளவு மீன் வரத்து இருந்து வந்தது.
இந்த சூழ்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நேற்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதில் இறைச்சி கடைகள் எதுவும் இயங்க அனுமதி இல்லை என்று அரசு அறிவித்து உள்ளது.
இதன் எதிரொலியாக கடலூர் துறைமுக பகுதி பைபர் படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்தன.
இதனால் கடலூர் துறைமுக பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடலூர் முதுநகரில் இயங்கிவந்த மீன் அங்காடியும், மூடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story