தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா


தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 May 2021 11:58 PM IST (Updated: 24 May 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா.

தர்மபுரி,

தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 போலீசார் மற்றும் போலீஸ் நிலைய வளாகத்தில் குடியிருக்கும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசு மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் போலீசார் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மற்ற போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.

Next Story