நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 931 ரேஷன் கடைகள் மூடப்பட்டன; அரிசி, சர்க்கரை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி


நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 931 ரேஷன் கடைகள் மூடப்பட்டன; அரிசி, சர்க்கரை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 24 May 2021 11:59 PM IST (Updated: 24 May 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 931 ரேஷன் கடைகள் மூடப்பட்டன.

பரமத்திவேலூர்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வில்லா முழு ஊரடங்கு நேற்று முதல் வருகிற 31-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைெயாட்டி மளிகை, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 
நாமக்கல் மாவட்டத்தில் 931 ரேஷன் கடைகள் உள்ளன. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் நேற்று ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். அதேசமயம், ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் இதுவரை கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வாங்காத குடும்ப அட்டைதாரர்களும் சிரமமடைந்தனர். 
பரமத்திவேலூர் தாலுகாவை பொறுத்த வரையில், நேற்று 59 முழு நேர ரேஷன் கடைகளும், 51 பகுதி நேர ரேஷன் கடைகளும் மூடப்பட்டிருந்தன. ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளதை அறியாத சிலர், கடைகளுக்கு சென்று பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றதை காண முடிந்தது.
இந்தநிலையில் முழு ஊரடங்கின் போதும் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு நேற்று மாலை அறிவித்தது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படுவதால் குடும்ப அட்டைதாரர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story