புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது


புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 25 May 2021 12:23 AM IST (Updated: 25 May 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள இந்திரா நகரில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சுந்தர்ராஜன் (வயது 40). இவர் தனது பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி சாலைக்கிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி (பொறுப்பு) தலைமையில் இளையான்குடி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடையின் அருகே உள்ள சுந்தர்ராஜனின் வீட்டின் மாடியில் உள்ள அறையில் சோதனை நடத்திய போது அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3¼ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுந்தர்ராஜனை போலீசார் கைது செய்தனர்.


Next Story