தேவதானம் கோவிலில் சிறப்பு வழிபாடு
வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேவதானம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தளவாய்புரம்,
சேத்தூர் அருகே உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் வைகாசி மாதம் நடைபெறும் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்ட திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி இந்த திருவிழா கோவில் உள்ளே நடைபெற்றது. நேற்று பகல் 11 மணிக்கு கோவிலின் உள்ளே தவம் பெற்ற நாயகி அம்மன் ஒரு சப்பரத்திலும், அம்மையப்பர் சுவாமி பிரியாவிடை அம்மன் மற்றொரு சப்பரத்திலும் அமர்ந்து இருந்தனர். முன்னதாக சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமி மற்றும் அம்பாள் சப்பரத்தில் கோவிலை வலம் வந்தனர்.இதில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை கோவிலின் பரம்பரை அறங்காவலர் ரத்தினகுமார், செயல் அலுவலர் மகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story