இன்று மின்தடை


இன்று மின்தடை
x
தினத்தந்தி 25 May 2021 12:38 AM IST (Updated: 25 May 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் கோட்ட பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆ.தெக்கூர் உள்ளிட்ட 3 துணை மின் நிலையங்களில் உயர் மின்னழுத்த பாதைகளில் மரம் வெட்டும் பணி இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதில் திருப்பத்தூர் நகர் பகுதி மற்றும் கே.வைரவன்பட்டி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், சிங்கம்புணரி நகர் பகுதிகளில் மற்றும் மணப்பட்டி பிரான்மலை, கிருங்காக்கோட்டை, செல்லியம்பட்டி, வையாபுரிபட்டி அணைக்கரைப்பட்டி, மற்றும் வேங்கைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10 மணி முதல் 11 மணி வரையும், எஸ்வி.மங்கலம், நாட்டார்மங்கலம், குமரிபட்டி, செருதப்பட்டி, கல்லம்பட்டி, சிலநீர்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 10 மணி முதல் 2 மணி வரையும், எஸ்.புதூர் பகுதிகளுக்கு உட்பட்ட கிழவயல், வாராப்பூர், கட்டையன்பட்டி, அரியாண்டப்பட்டி, குளத்துப்பட்டி, முசுண்டபட்டி, காணப்பட்டி, கருமிப்பட்டி, சின்னாளம்பட்டி, வலசை பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும ்10 மணி முதல் 2 மணி வரையும், ஆதெக்கூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நெற்குப்பை,ஒவலிப்பட்டி, ஒழுகமங்கலம், வேந்தன்பட்டி, திருக்களாம்பூர், வார்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 10 மணி முதல் 12 மணி வரையும் இன்று மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின் செயற்பொறியாளர் வெங்கடராமன் தெரிவித்து உள்ளார்.


Next Story