2 கார்கள், 150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


2 கார்கள், 150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 May 2021 12:42 AM IST (Updated: 25 May 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கில் விதிமுறை மீறிய 2 கார்கள், 150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இ-பதிவு இல்லாமல் விதிமுறை மீறிய வாகனங்களில் சுற்றியவர்கள் கண்டிக்கப்பட்டனர். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி சிவகங்கை சப்-டிவிசன் பகுதியில் ஒரு கார், 35 இருசக்கர வாகனங்களும், காரைக்குடி சப்-டிவிசன் பகுதியில் ஒரு கார்,34 இருசக்கரவாகனங்களும், திருப்பத்தூர் சப்-டிவிசன் பகுதியில் 31 இருசக்கர வாகனங்களும், தேவகோட்டை சப்-டிவிசன் பகுதியில் 23 இருசக்கர வாகனங்களும், மானாமதுரை சப்-டிவிசன் பகுதியில் 27 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் 2 கார்கள் மற்றும ்150 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் தெருக்களில் திரிந்த 2 கார் மற்றும் 150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து காரணமில்லாமல் தெருக்களில் திரிபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் அவர்கள் மீது வழக்கும்பதிவு செய்யப்படும் எனவே பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.



Next Story