வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை


வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை
x
தினத்தந்தி 25 May 2021 12:49 AM IST (Updated: 25 May 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை தொடங்கியது.

ராஜபாளையம், 
பொதுமக்களுக்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் தடையின்றி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்திலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில்  ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், தாசில்தார் ரெங்கநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், உதவி திட்ட அலுவலர் நாகரத்தினம், ஊரக தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, நகராட்சி ஆணையர் சுந்தரம்பாள், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சத்தியவதி, நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.  வாகனம் மூலம் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார். 
அதேபோல தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷ்யாம்ராஜா முன்னிலையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெற்கு, வடக்கு நகர பொறுப்பாளர்கள் மணிகண்ட ராஜா, ராமமூர்த்தி, நகர பொறுப்புக் குழு உறுப்பினர் காஜி உதுமான், தொகுதி தொழில்நுட்ப தகவல் அணி பிரபாகரன், 1-வது வார்டு கிளை செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story