போலீசார் வாகன சோதனை; விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்
போலீசார் வாகன சோதனை செய்து, விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் மாவட்ட போலீஸ் அதிகாரி நிஷா பார்த்திபன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர். மேலும் இ-பதிவு இல்லாமல் வாகனங்களில் வந்தவர்களையும் பிடித்து அபராதம் விதித்தனர். முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story