மது விற்ற 5 பேர் சிக்கினர்
மதுரையில் மது விற்ற 5 பேர் சிக்கினர்
மதுரை, மே.
மதுரை மேலமாரட் வீதியில் உள்ள தனியார் விடுதி கார் நிறுத்தும் இடத்தில் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மது விற்ற சோலையழகுபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 53), கடச்சனேந்தல் மனோகரன் (68) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 316 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதே போன்று களத்துபொட்டல் பகுதியில் மது விற்ற தினேஷ்குமார் (28), செல்லூரில் மது விற்ற வில்லாபுரத்தை சேர்ந்த மகேந்திரன் (27), தெப்பக்குளம் பகுதியில் அனுப்பானடியை சேர்ந்த ராஜீவ் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 86 மது பாட்டில்கள், 17 ஆயிரத்து 340 ரூபாய் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story