சங்கரன்கோவில் பகுதியில் 60 வாகனங்கள் பறிமுதல்


சங்கரன்கோவில் பகுதியில்  60 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 May 2021 1:22 AM IST (Updated: 25 May 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் பகுதியில் 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சங்கரன்கோவில்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று சங்கரன்கோவிலில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலிவரதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அனுமதியின்றி வாகனத்தில் சுற்றியவர்களிடம் இருந்து சுமார் 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்களையும், உரிய ஆவணங்கள் கொண்டு வந்தவர்களையும் அனாவசியமாக வெளியில் சுற்ற வேண்டாம் என அறிவுறுத்தி அனுப்பினார். 

Next Story