திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள்தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்ய உத்தரவு

திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள்தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 25 May 2021 1:25 AM IST (Updated: 25 May 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள்தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்ய உத்தரவு

திருப்பூர்
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதில் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆணையாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்கு விவரங்களை நாளைக்குள் (புதன்கிழமை) முழுவதுமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையாளர் தெரிவித்தார். இதற்கு கூட்டத்தில் பங்கேற்ற வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஊரடங்கு காலமாக இருப்பதால் தேர்தல் செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விரைந்து செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story