திருப்பூரில் முன்கள பணியாளர்களுக்கு பழ வகைகள் போலீஸ் உதவி கமிஷனர் வழங்கினார்


திருப்பூரில் முன்கள பணியாளர்களுக்கு பழ வகைகள் போலீஸ் உதவி கமிஷனர் வழங்கினார்
x
தினத்தந்தி 25 May 2021 1:28 AM IST (Updated: 25 May 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

thirupur police frutsandvegtabale திருப்பூரில் முன்கள பணியாளர்களுக்கு பழ வகைகள் போலீஸ் உதவி கமிஷனர் வழங்கினார்

திருப்பூர்
திருப்பூர் மாநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோல் வீதியில் சுற்றித் திரிபவர்கள் மீதும் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க கொரோனா தடுப்பு பணியாற்றும் சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் ஆகிய முன் களப்பணியாளர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்புபவர்கள் ஆகியோருக்கு காவல் துறை சார்பில் பழங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாம்பழம், திராட்சை பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து ஆகியவற்றை வழங்கினார்கள்.

Next Story