அந்தியூரில் கடந்த 4 நாட்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்- மனைவி உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி
அந்தியூாில் கடந்த 4 நாட்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்- மனைவி உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலியானாா்கள்.
அந்தியூர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த 52 வயது ஆண் மற்றும் அவருடைய 47 வயது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் கணவன்- மனைவி இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் 2 பேரும் நேற்று பரிதாபமாக இறந்தனர்.
ஏற்கனவே நேற்று முன்தினம் அந்த ஆணின் தாயும், அவருடைய சித்தப்பா, சித்தி ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் கொரோனாவுக்கு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டு குடும்பமாக வசித்த அவர்கள் 5 பேரும் கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story