தாராபுரத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 30 பேர் மீது வழக்குப்பதிவு
தாராபுரத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 30 பேர் மீது வழக்குப்பதிவு
தாராபுரம்
தமிழகத்தில் நேற்று காலை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பால் வினியோகம், மருந்து கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரம் வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால் போலீசார் நடவடிக்கை கடுமையாக எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உடுமலை புறவழிச்சாலை பகுதியில் தடைகளை மீறி வெளியே சுற்றி திரிந்த 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யதனர்.
Related Tags :
Next Story