அந்தியூர், தாளவாடி, வெள்ளோட்டம்பரப்பு பகுதியில் 142 பேருக்கு கொரோனா
அந்தியூர், தாளவாடி, வெள்ளோட்டம்பரப்பு பகுதியில் 142 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
ஈரோடு
அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடலை சேர்ந்த 33 வயது பெண், அத்தாணியை சேர்ந்த 48 வயது பெண், கீழ்வாணியை சேர்ந்த 35 வயது ஆண் உள்பட மொத்தம் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல் தாளவாடி ஊராட்சியில் 39 பேருக்கும், திங்களூர் ஊராட்சியில் 49 பேருக்கும், பையனாபுரம் ஊராட்சியில் 3 பேருக்கும், மல்லன்குழி ஊராட்சியில் 9 பேருக்கும், இக்களூர் ஊராட்சியில் 2 பேருக்கும் உள்பட மொத்தம் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிக்கள்ளி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஊஞ்சலூர் அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய செம்மாண்டாம் பாளையத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 60, 34 வயது ஆண்கள் 2 பேர், 58, 31, 22 வயது பெண்கள் 3 பேர், 12 வயது சிறுமி, 8 வயது சிறுவன் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story