திருச்சியில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி
திருச்சியில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கும், 2-ம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கடந்த 20-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொடங்கி வைத்தார். நேற்று முதல் திருச்சியில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதற்காக சென்னையிலிருந்து தலைமை சுகாதார துறை சார்பில் சுமார் 50 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போட வரும் நபர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அனைவருமே தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு காண்பித்தால் மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்படும்

Related Tags :
Next Story