வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று காய்கறி, பழங்கள் விற்பனை
திருச்சியில் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது
திருச்சி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின்போது பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வினியோகம் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதனடிப்படையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளுக்கும் 3 சரக்கு ஆட்டோ, 2 தள்ளு வண்டிகள் என தலா 5 வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை தவிர, இதர வியாபாரம் செய்யக்கூடாது. விற்பனை அனுமதிக்கப்பட்ட நேரம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே. மேலும் தேவை ஏற்படின் கூடுதலாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு மளிகை பொருட்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மளிகை கடை நிறுவனங்களில் தொலைபேசி மூலமாக தங்களுக்கு தேவையான மளிகை விவரத்தினை தெரிவிக்கும் பட்சத்தில் நேரடியாக வீட்டிற்கு பொருட்கள் வழங்கப்படும். இதற்கென ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மேற்பார்வையாளர் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் திட்டத்தை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் அமைச்சர் கே.என்.நேரு நேற்று காலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு மற்றும் எம்.எல்.ஏக்கள், வேளாண் அதிகாரிகள், தோட்டக்கலை துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story