ரெயிலில் அடிபட்டு ஊழியர் பலி
ரெயிலில் அடிபட்டு ஊழியர் பலி
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே நாகமங்கலம் ஊராட்சி சின்னதாண்டர குண்டா கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா (வயது 46). இவர் நாகதுணை ெரயில் நிலையத்தில் ஊழியராக பணி செய்து வந்தார்.
இந்தநிலையில் நாகதுணை ெரயில் நிலையம் அருகே சிவப்பா பணி செய்து கொண்டிருந்தபோது, ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற ரெயில் எதிர்பாராதவிதமாக சிவப்பா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் சம்பவ இடத்திற்கு சென்று பலியான சிவப்பாவின் உடலை மீட்டு பிரேத பிரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சிவப்பாவுக்கு அமராவதி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
======
Related Tags :
Next Story