ஓசூர் அருகே பெயிண்டர் அடித்துக்கொலை ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் கைது


ஓசூர் அருகே  பெயிண்டர் அடித்துக்கொலை ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 May 2021 2:55 AM IST (Updated: 25 May 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே பெயிண்டர் அடித்துக்கொலை ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் கைது

ஓசூர்:
ஓசூர் அருகே பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஐ.டி.ஐ. மாணவர்
ஓசூர் அருகே ஒன்னல்வாடி அடுத்துள்ள சோமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 20). ஐ.டி.ஐ. மாணவரான இவர் மீது ஆந்திர மாநிலம் வீ.கோட்டா போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சூர்யா தலைமறைவாக இருந்ததால் அவரை கைது செய்யும் நோக்கில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநில போலீசார் சோமநாதபுரம் கிராமத்திற்கு வந்தனர். 
அங்கு தலைமறைவாக உள்ள சூர்யா குறித்து தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு கிராம மக்களிடம் கூறி சென்றனர். இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி சூர்யா ஊருக்கு வந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு கட்டத்தில் ஓ.காரப்பள்ளியை சேர்ந்த கோபால் மகன் பெயிண்டரான எல்லப்பா (22) என்பவர் பொதுமக்களுடன் சேர்ந்து சூர்யாவை அடித்ததாக கூறப்படுகிறது. 
அடித்துக்கொலை
வெளியூரை சேர்ந்தவர் ஒருவர் தன்னை அடித்து விட்டாரே என்று ஆத்திரமடைந்த சூர்யா, எல்லப்பாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி மது அருந்துவதற்காக சோமநாதபுரம் பகுதியில் உள்ள ெரயில் தண்டவாள பகுதிக்கு எல்லப்பாவை அழைத்து சென்றார். அங்கு தனது உறவினர்களான மத்திகிரி நேதாஜி நகரை சேர்ந்த சுதர்சன் (35), அவரது தம்பி சுதாநாதன் (33) ஆகியோருடன் சேர்ந்து இரும்பு கம்பியால் எல்லப்பாவை அடித்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற ஓசூர் நகர போலீசார் எல்லப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இ்ந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
கைது
இந்தநிலையில் அதே பகுதியில் பதுங்கியிருந்த ஐ.டி.ஐ. மாணவர் சூர்யா, சுதர்சன், சுதாநாதன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். முன்விரோதத்தில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=====

Next Story