அய்யன்கொல்லி அருகே கொரோனா பரிசோதனை முகாம்


அய்யன்கொல்லி அருகே கொரோனா பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 25 May 2021 2:55 AM IST (Updated: 25 May 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லி அருகே கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நெல்லிமேடு, அம்பலவயல் பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர் கார்த்திக்ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். 

கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

 வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். என்று அறிவுரை வழங்கினர். 

Next Story