சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவுக்கு 38 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவுக்கு 38 பேர் பலி
x
தினத்தந்தி 25 May 2021 4:04 AM IST (Updated: 25 May 2021 4:04 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு 38 பேர் பலி

சேலம்:
சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 38 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 889 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழப்புகள் அதிகம்
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு உயிரிழப்புகள் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக குறைவான வயதுடையவர்களும் கொரோனாவுக்கு பலியாகி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 966 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 244 பேர், ஓமலூரில் 87 பேர், சேலம் ஒன்றியத்தில் 82 பேர், ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 49 பேர், சங்ககிரியில் 46 பேர், காடையாம்பட்டியில் 40 பேர், வீரபாண்டியில் 39 பேர், எடப்பாடியில் 34 பேர், கெங்கவல்லியில் 32 பேர், வாழப்பாடியில் 27 பேர், தலைவாசலில் 26 பேர், மகுடஞ்சாவடியில் 24 பேர், நங்கவள்ளியில் 19 பேர், தாரமங்கலத்தில் 18 பேர், மேச்சேரியில் 17 பேர், ஏற்காட்டில் 13 பேர், மேட்டூரில் 11 பேர், பனமரத்துப்பட்டியில் 10 பேர், கொளத்தூரில் 8 பேர், கொங்கணாபுரத்தில் 6 பேர், பெத்தநாயக்கன் பாளையத்தில் 5 பேர், நரசிங்கபுரத்தில் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
57 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 913 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 835 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 5,707 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 149 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
38 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 38 பேர் பலியாகி உள்ளனர். அதாவது சேலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது.
,,,,,,,,,,,,,,,

Next Story