பெரும்பாறை அருகே சாலை ஓரங்களில் பூத்து தொங்கும் சங்கு பூக்கள்


பெரும்பாறை அருகே சாலை ஓரங்களில் பூத்து தொங்கும் சங்கு பூக்கள்
x
தினத்தந்தி 25 May 2021 4:37 PM IST (Updated: 25 May 2021 5:39 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே சாலை ஓரங்களில் சங்கு பூக்கள் பூத்து தொங்குகின்றன.

பெரும்பாறை:

பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, புல்லாவெளி, கே.சி.பட்டி போன்ற கீழ்மலைப்பகுதியில் அதிகமானோர் காபி, வாழை, மிளகு போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் யாரும் புகாமல் இருக்க எல்லைகளில் வேலிக்காக விவசாயிகள் சங்கு பூ செடிகளை நடவு செய்துள்ளனர். 

இதுபோல் புல்லாவெளி பகுதியில் உள்ள தோட்டங்களில் தார் சாலை ஓரங்களில் வேலிக்காக சங்கு பூ செடிகள் நடவு செய்துள்ளனர். இந்தநிலையில் தற்போது சங்கு பூ செடிகள் ரோஸ், மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் பூத்து தொங்குகின்றன. இவை சாலை ஓரங்களில் மின்சார குண்டு பல்புகளை தொங்க விட்டது போல் காட்சியளிக்கிறது. இதை அப்பகுதியில் வாகனத்தில் செல்பவர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Next Story