நாசரேத் அருகே கிணற்றில் விழுந்த மயில் மீட்பு


நாசரேத் அருகே கிணற்றில் விழுந்த மயில் மீட்பு
x
தினத்தந்தி 25 May 2021 5:49 PM IST (Updated: 25 May 2021 5:49 PM IST)
t-max-icont-min-icon

நாசரேத் அருகே கிணற்றில் விழுந்த மயில் மீட்கப்பட்டது.

நாசரேத்:
 நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் செந்தில். விவசாயி. இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அந்தத் தோட்டத்தில் கிணறு உள்ளது. நேற்று வழக்கம் போல செந்தில் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது கிணற்றுக்குள் தண்ணீரில் ஒரு ஆண் மயில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் துணையுடன் அவர் அந்த மயிலை மீட்டார். பின்னர் அந்த மயிலை திருச்செந்தூர் வனச்சரகர் ரவீந்திரனிடம் ஒப்படைத்தனர்.

Next Story