ஊரடங்கால் மூடப்பட்ட ரேஷன் கடைகள் மீண்டும் திறப்பு


ஊரடங்கால் மூடப்பட்ட ரேஷன் கடைகள் மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 25 May 2021 7:19 PM IST (Updated: 25 May 2021 7:19 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் மூடப்பட்ட ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.


திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு கடந்த 10-ந்தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதோடு கொரோனா நிவாரணமாக ரேஷன்கார்டுக்கு ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்டு, முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் அடுத்த மாதம் (ஜூன்) 2-வது தவணை நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த 24-ந்தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து பிற கடைகளுடன் ரேஷன்கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். இதைத் தொடர்ந்து ரேஷன்கடைகளை திறந்து பொதுமக்களுக்கு பொருட்களை வினியோகிக்கும்படி அரசு உத்தரவிட்டது.
அதன்படி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,035 ரேஷன்கடைகளும் திறக்கப்பட்டன. இதை அறிந்ததும் மக்கள் ஆர்வமுடன் சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கினர். அதேநேரம் கொரோனா பரவலை தடுப்பதற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் 3 அடி நீள கூம்பு வடிவ தகரம் மூலம் வழங்கப்பட்டது.


Next Story