ரேஷன் கடையில் அலைமோதிய பொதுமக்கள்
உடுமலை ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
உடுமலை
உடுமலை ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
நிவாரணத்தொகை
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம், கடந்த 15ந்தேதிமுதல் முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. உடுமலை தாலுகாவில் 127 முழுநேர ரேஷன் கடைகள், 56 பகுதி நேர ரேஷன் கடைகள் எனமொத்தம் 183 ரேஷன் கடைகள் உள்ளன. அரிசி வாங்கும் ரேஷன் அட்டைகள் 1 லட்சத்து 6 ஆயிரத்து 30 உள்ளன. இதில் கடந்த 22ந்தேதி வரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 146 ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டிருந்தது.
அலைமோதிய கூட்டம்
இந்த நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வந்ததால் கடந்த 15ந் தேதி முதல் 20ந் தேதி வரை அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுவிட்டதை தொடர்ந்து கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிளில் நிவாரண தொகை மட்டுமல்லாது அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் இந்த மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் நேற்று முதல் ரேஷன் கடைகளில் காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை வினியோகிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து உடுமலை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகள் நேற்று திறக்கப்பட்டு பொருட்கள் வினியோகிக்கப்பட்டன. அதனால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.
Related Tags :
Next Story