201 பேரின் வாகனங்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 201 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முன்தினம் முதல் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு அமலில் இருக்கிறது.
இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 201 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவர்கள் ஓட்டி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
அந்த வகையில் மாவட்டம் முழுவதும் இதுவரை 2 ஆயிரத்து 618 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
இதற்கிடையே நேற்று முககவசம் அணியாமல் சுற்றிய 383 பேரை போலீசார் பிடித்து தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story