தூத்துக்குடியில் மது விற்ற 6 பேர் கைது


தூத்துக்குடியில் மது விற்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 25 May 2021 8:49 PM IST (Updated: 25 May 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 133 லிட்டர் கள், 87 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story