கோவில்பட்டியில் கொரோனாவுக்கு 3பேர் பலி


கோவில்பட்டியில் கொரோனாவுக்கு 3பேர் பலி
x
தினத்தந்தி 25 May 2021 8:53 PM IST (Updated: 25 May 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனையில் கொரோனா நோயாளிகள் 177 பேர் சிகிச்சை பெற்று வருகி றார்கள். இதில் 87 பேர் ஆண்கள், 90 பேர் பெண்கள் ஆவர்.
நேற்று கொரோனா தொற்று பாதித்த 16 பேர் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 30 பேர் வீடு திரும்பினர். தனியார் கல்லூரி மையத்தில்  148 பேரும், மற்றொரு கல்லூரி மையத்தில் 87 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த 45 வயது ஆணும், கழுகுமலை யைசேரந்த 67 வயது முதியவரும், புதூரை சேர்ந்த 85 வயது முதியவரும் உயிரிழந் தனர்.

Next Story