கொரோனா பரவல் காரணமாக தேவன்-1 கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு


கொரோனா பரவல் காரணமாக தேவன்-1 கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு
x
தினத்தந்தி 25 May 2021 10:37 PM IST (Updated: 25 May 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் காரணமாக தேவன்-1 கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் தேயிலை தோட்டத்தொழிலாளர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன்-1 கிராமத்தில் சுமார் 100 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகிறது. 

இதில் 16 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராமம் முழுவதும் பேரூராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.பின்னர் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டது. தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜகுமார், தாசில்தார் தினேஷ், வன உரிமை அமர்வு அலுவலர் சிவக்குமார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து அக்கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் 14 நாட்களுக்கு தோட்டத்தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் வேலைக்கு செல்லக்கூடாது என அதிகாரிகள் தடை விதித்தனர்.

Next Story